“உண்மையில் இது இனப்படுகொலைதான்” ரஷ்யா மீது மீண்டும் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு.
உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் பொதுமக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாட்டில் ரஷ்யா இனப்படுகொலை செய்வதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து சுமார் 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அந்நாட்டின் தலைநகரை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது ரஷ்ய ராணுவம். ஆனால் அதனை உக்ரைன் ராணுவம் தடுத்து வருகிறது.
பல நகரங்களை கைப்பற்றுவதும் அதனை உக்ரைன் மீட்பதுமாக நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வருகிறது. போரின் காரணமாக பல மில்லியன் மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
ரஷ்ய துருப்புக்களிடமிருந்து உக்ரேனியப் படைகள் கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தை மீட்டெடுத்த பிறகு, சனிக்கிழமை ஒரே தெருவில் சிவில் உடையில் 20 பேரின் உடல்கள் கிடந்ததாக AFP செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் தலைநகரின் வடமேற்கே புறநகர் நகரத்தில் குடியிருப்பு சாலையில் பல நூறு மீட்டர்கள் சடலங்கள் சிதறிக் கிடந்தன. உயிரிழந்தவர்களின் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் ரஷ்யா மீது கடும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது. ரஷ்ய துருப்புக்களிடமிருந்து உக்ரேனியப் படைகள் கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தை மீட்டெடுத்த பிறகு, சனிக்கிழமை ஒரே தெருவில் சிவில் உடையில் 20 பேரின் உடல்கள் கிடந்ததாக AFP செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் தலைநகரின் வடமேற்கே புறநகர் நகரத்தில் குடியிருப்பு சாலையில் பல நூறு மீட்டர்கள் சடலங்கள் சிதறிக்கிடந்தன. உயிரிழந்தவர்களின் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் ரஷ்யா மீது கடும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது.
புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டிருப்பதற்கு ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. புச்சா படுகொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உத்தரவிட்டுள்ள நிலையில், உலக அளவில் அங்கிருந்து வெளியான புகைப்படங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
இந்நிலையில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது நாட்டில் ரஷ்யா இனப்படுகொலை செய்வதாக குற்றம் சாட்டினார். “உண்மையில் இது இனப்படுகொலைதான். முழு தேசத்தையும் மக்களையும் முயற்சி என “Face the Nation” நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாங்கள் உக்ரைனின் குடிமக்கள், ரஷ்ய கூட்டமைப்பின் கொள்கைக்கு நாங்கள் அடிபணிய விரும்பவில்லை. நாம் அழிக்கப்படுவதற்கும் அழிப்பதற்கும் இதுவே காரணம்.” என்றார்.
புச்சாவில் ரஷ்யப் படைகள் “படுகொலை” நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் உக்ரேனைனின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. புச்சாவில் உடல்கள் இருப்பது வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் உக்ரேனிய அரசாங்கத்தின் “இன்னொரு ஆத்திரமூட்டல்” என்று கூறியுள்ளது. புச்சாவில் “ஒரு உக்ரைன் குடிமகன் கூட ரஷ்ய இராணுவத்தின் வன்முறை நடவடிக்கையை எதிர்கொள்ளவில்லை” என்றும் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது.