ஒருவருட சம்பளத்தை கையளித்தார் ஹரின் பெர்ணான்டோ எம்.பி.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, தன்னுடைய ஒரு வருடத்துக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில், அதற்கான கடிதத்தை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றிய ஹரின் பெர்ணான்டோ, நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, தன்னுடைய ஒரு வருடத்துக்கான சம்பளத்தை பெறமாட்டேன் என்றும் பாராளுமன்ற உணவகத்தில் உணவு உண்ண மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.