கொழும்பு காலி முகத்திடல் போராட்டங்களின் புது வடிவம் (Photos)
அரசு போராட்டங்களின் வேகத்தை குறைத்து மக்களை சோர்வடைய வைப்பதற்காக நீண்டதொரு விடுமுறையை அறிவித்தது.
ஆனால் எதிர்வரும் கிழமை கொழும்பு காலி முகத்திடல் போராட்ட களம் வேறு வடிவம் பெற்றுள்ளது.
தொடர்ந்து சங்கிலி தொடராக நாட்கணக்கில் இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர , தற்காலிக கழிவறைகள், கொட்டகைகள், மருத்து பொருட்கள், குடிபானங்கள், உணவு வகைகள் என பல நாட்களுக்கு தேவையான பொருட்கள் இன்று காலி முகத்திடலுக்கு வந்து சேர்ந்துள்ளன.
இதற்குள் அரசு தந்ரோபயமாக , மது வகைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி , போராட்ட வடிவத்தை திசை திருப்ப முயன்றனர். அதை உணர்ந்த போராட்டகாரர்கள் , அவர்களை துரத்திவிட்டதோடு , சிலரை வைத்து காவலில் நிற்கும் போலீசாரை வன்முறைக்கு தள்ள வெற்று போத்தல்களை போலிசாரை நோக்கி வீச முயன்ற வேளை , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளையோர் அவற்றை தடுத்து , போலீசாரோடு மோத முயன்றோரை ஆர்ப்பாட்ட களத்திலிருந்து துரத்தியதாக அங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.