41 அரசாங்க சுயேச்சைகளும் இன்று காலை சஜித்தை சந்தித்தனர் : நம்பிக்கையில்லாப் பிரேரணையா அல்லது பதவி நீக்கமா?
ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்க ஐக்கிய மக்கள் சக்தி இறுதி முடிவு! சஜித் இன்று 5 மணிக்கு கட்சி தலைவர்களை சந்திக்கிறார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் 21வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
21வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரும் தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவும் தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று மாலை எதிர்க்கட்சி தலைவர் அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
இந்த கலந்துரையாடலை இன்று மாலை 5 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெஜெட் வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்ச மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.