கஜேந்திரகுமார், கஜேந்திரன் எம்.பிக்கள் முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசியப் பட்டியலில் தெரிவான கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவருமே முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இந்த உறுதிப்பிரமாண நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளா்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளா் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Comments are closed.