காலிமுகத்திடல் குப்பைத் தொட்டிகளில் முஸ்லிம் அரசியல்வாதிகள்.
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்கள் ஒட்டப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், நஸீர் அஹமட் மற்றும் பைசல் ஹாசீம் ஆகியோரின் உருவப்படங்களே இவ்வாறு குப்பைத் தொட்டிகளில் ஒட்டப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, குப்பைகளை மூடை மூடையாகக் கட்டி காலிமுகத்திடலில் வைத்துள்ள போராட்டக்காரர்கள் அந்தக் குப்பை மூடைகளுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் அணியும் சிவப்பு நிற சால்வையை அணிவித்துக் காட்சிப்படுத்தியுள்ளதையும் காணமுடிகின்றது.