காலி முகத்திடலில் புதிதாக நிறுவப்பட்ட ஆண்டெனா அமைப்பு அகற்றப்பட்டது – டயலொக் அறிவிப்பு
டயலொக் ஆக்ஸியாட்டா பிஎல்சி, வலையமைப்பு நெரிசலுக்குத் தீர்வாக காலி முகத்திடலில் புதிதாக நிறுவப்பட்ட 20 அடி ஃபேஸ் போல் ஆன்டெனா அமைப்பை அகற்ற முடிவு செய்துள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) அனுமதியைப் பெறுவதற்கு முன்னர், நுகர்வோர் அனுபவிக்கும் இணைய இடையூறுகளைக் குறைப்பதற்காக இந்த ஆண்டெனா நிறுவப்பட்டதாக நிறுவனம் கூறுகிறது.
Dialog இலிருந்து அறிவிப்பு
காலி முகத்திடலில் திறன் மேம்படுத்தல் தீர்வு தொடர்பாக பொதுமக்களால் எழுப்பப்படும் எதிர்ப்புகளை கருத்தில் கொண்டும், அதற்கு மதிப்பளித்தும், டயலொக் ஃபேஸ் போல் ஆன்டெனா அமைப்பை நீக்கும் முடிவை எடுத்துள்ளது. நிறுவலின் ஒரே நோக்கம் காலி முகத்திடல் பகுதியில் நெரிசல் அளவைக் குறைப்பதே என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். டயலொக் தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி அப்பகுதியில் இணைய நெரிசல் அளவைக் குறைப்பதற்கான நிறுவனத்தின் சிறந்த முயற்சிகளை உறுதி செய்கிறது என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.