பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியில் கொரோனா தொற்று – சீனாவில் பரபரப்பு
பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் ஷென்ஷென் நகரில் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதித்து பார்த்ததில், அதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கோழி இறைச்சியானது, பிரேசில் நாட்டின் தென் மாகாணமான அரோரா அலிமென்டோசில் உள்ள தொழிற்சாலையிலிருந்து வந்துள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஷென்ஷென் நகர மக்கள், இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பினும் அந்த கோழி இறைச்சியுடன் தொடர்பில் இருந்த நபர்களையும், தொடர்புடைய பிற தயாரிப்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
Comments are closed.