தென்னாப்பிரிக்காவில் பெய்த கனமழையால் 395 பேர் உயிரிழப்பு…
தென்னாப்பிரிக்காவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கிய நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன்படி கடற்கரை நகரமான டர்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதீத கனமழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாலைகள், மேம்பாலங்கள், துறைமுகம் உள்ளிட்ட கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளன.
மேலும் ,40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 68 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நாட்டு அரசு ஒதுக்கியுள்ளது.