தோல்விக்கு இது தான் காரணம்; வேதனையை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், குஜராத் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா, பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜடேஜா பேசுகையில், “இந்த போட்டியை நாங்கள் மிக சிறப்பாக துவங்கினோம். பந்துவீச்சின் போது முதல் 6 ஓவர்களில் மிக சிறப்பாக செயல்பட்டோம். பந்துவீச்சில் நாங்கள் வைத்திருந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை என்பதே உண்மை.
குறிப்பாக கடைசி ஐந்து ஓவர்களில் எங்களது திட்டங்களை செயல்படுத்த தவறிவிட்டோம். கிரிஸ் ஜோர்டன் யார்கர் பந்துகள் வீசியிருக்க வேண்டும், ஆனால் அதை அவர் செய்ய தவறிவிட்டார். டி.20 போட்டிகளில் இது போன்று நடப்பு இயல்பானது தான்” என்று தெரிவித்தார்.