செஞ்சோலை நினைவேந்தலுக்கு தடை
செஞ்சோலை படுகொலையின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
முல்லைத்தீவு – வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி இலங்கை விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த தினத்தினை நினைவுகூர்ந்து வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நினைவேந்தல் குழுவால் நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்தப்படும்.
இதனையடுத்து, ஏற்பாட்டாளர்களான ஈசன் மற்றும் ரூபன் ஆகியோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த புதுக்குடியிருப்பு பொலிஸார், நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த உத்தரவை மீறி நிகழ்வை நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.