நாட்டை ஆள முடியாவிட்டால் எங்களிடம் ஒப்படையுங்கள்! சபையில் சஜித் கண்டனம்.
“மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தி, நாட்டை ஆள முடியாவிட்டால், மாற்றுத் தரப்பினரிடம் ஆட்சியை கையளிப்பதே மேலான செயல்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ரம்புக்கனை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ரம்புக்கனைத் தாக்குதலின் உண்மைகளை மூடிமறைக்க வேண்டாம். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை உடனடியாக நாடாளுமன்றத்துக்கு அழைக்க வேண்டும். அவர்கள் உண்மைச் சம்பவங்களை வெளியில் சொல்ல வேண்டும்.
அரசின் – அரச பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குப் பாதுகாப்புத் தரப்பினர் துணைபோகக்கூடாது. நாட்டையும், மக்களையும் காக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்புத் தரப்பினருக்கு இருக்கின்றது” – என்றார்.