ரேஷன் கடையில் வேலை… காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு

நியாய விலைக் கடைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அதிவேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மன்னார்குடி தொகுதி நீடாமங்கலம் ஒன்றியம் கட்டக்குடி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடைக்கு கட்டடம் கட்ட அரசு முன்வருமே என திமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்பி. ராஜா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசியகூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆண்டுதோறும் 500 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

மேலும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியின் மூலமாக நியாயவிலை கடைகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், நியாயவிலைக் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.