பிரசன்ன ரணதுங்கவின் வீட்டை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரியும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவும் மினுவாங்கொடை உடுகம்பொல புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் இருந்து இன்று (24) ஊர்வலமும் வாகன பேரணியும் ஆரம்பமானது.
போராட்டக்காரர்கள் மினுவாங்கொடையை வந்தடைந்ததையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (23) பிற்பகல் மற்றும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.