நானே பிரதி செயலாளர் – அனுஷா சந்திரசேகரன் தெரிவிப்பு
மலையக மக்கள் முன்னணியின் யாப்பின் சரத்துக்கள் மற்றும் ஏற்பாடுகளின் அடிப்படையில் என்னை பிரதி செயலாளர் நாயகம் என்ற பதவியிலிருந்து நீக்கவில்லை. பிரதி செயலாளர் நாயகமாக தானே தொடர்ந்தும் நீடிக்கின்றதாக அனுஷா சந்திரசேகரன் அவருடைய முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் நேற்றைய தினம் நடைபெற விசேட கூட்டமொன்றில் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரனை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்திருந்தது.
அமரர் சந்திரசேகரனின் மறைவுக்கு பின்னர், அவரை கௌரவப்படுத்தும் வகையில் அவரின் மகளான அனுஷா சந்திரசேகரனுக்கு பிரதி செயலாளர் நாயகம் பதவியினை வழங்கியிருந்த அக்கட்சி, கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டுவருவதன் காரணமாக அவரை தற்காலிகமாக அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ் தெரிவித்திருந்தார்.
அனுஷா சந்திரசேகரன் வகித்த பிரதி செயலாளர் நாயகம் பதவிக்கு மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் பேராசிரியர், விஜயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.