புதிய வேலைவாய்ப்பைத் தேடுவதில் ஆர்வமற்ற 50% இந்தியர்கள் – ஷாக் ரிப்போர்ட்

நாட்டில் வேலைபார்க்கும் மக்கள் தொகையின் பாதிக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பைத் தேடுவதில் ஆர்வமில்லாத நிலையை அடைந்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
தேசிய பொருளாதாரம், பணவீக்கம், பொருட்கள் மற்றும் சேவைகள் உற்பத்தி உள்ளிட்ட தரவுகளை Centre for Monitoring Indian Economy Pvt என்ற தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், Reluctance Workers (வேலைத் தேட தயங்கும் பணியாளர்கள்) என்ற தலைப்பில் சில தரவுகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையான 1.3 கோடி பில்லியனின், 90 கோடி பேர் சட்டப்படி பணி செய்யக்கூடிய பிரிவினராக (Legal Working age Population) உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் 40-50 % பணியாளர்களாக உள்ளனர். ஆனால், தற்போது 90 கோடி பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புகளைத் தேடுவதில் ஆர்வமில்லாதவர்களாக உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை, அமெரிக்கா -ரஷ்யா ஆகிய நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகமாகும். மேலும், மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 2011-2016 வரையிலான ஆண்டுகளில் 46% ல் இருந்து 40%-க குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மக்களுக்கு போதுமான, தரமான வேலை வாய்ப்பு கிடைக்காதது இதற்கு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது, இந்தியாவுக்கும், உலகப் பொருளாதாரத்திற்கும் உள்ள மிகப்பெரிய சவால்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011-12 தேசிய மாதிரி கணக்கெடுப்பின் படி, நாட்டின் மொத்த பணியாளர்களில் (448.7 மில்லியன்களில்), முறைப்படுத்தப்படாத. மிகவும் பாதிக்கப்படக் கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை (447.2 மில்லியன்) 90% என்று மதிப்பிடப்படுகிறது. எனவே, இத்தகைய தொழிலாளர்களுக்கான உகந்த சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், குறைவான பெண்கள் பங்கேற்பு விகிதம் கொண்ட நாடாக உள்ளது. பெண்கள் பணியாற்றும் விகிதம் 2004-05ல் 28% என்று நிலையில் இருந்து 2011-12ல் 21.7% ஆக குறைந்தது. தற்போது, இந்த விகிதம் 19% ஆக உள்ளது. இது, அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கையை விட குறைவானதாகும். இதற்கு, தரமான வேலை, ஊதிய விகிதம் இடைவெளி, பாதுகாப்பு போன்ற பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
TNPSC Group 4: குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பம்
எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பெருக்குவதற்கும் மத்திய, மாநில அரசுகள் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.