‘விடுதலைக்கான போராட்டம்’ நடைபவனி கண்டியில் ஆரம்பம்!
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான எதிர்ப்புப் பேரணி இன்று முற்பகல் கண்டி நகரத்தில் தொடங்கியது.
‘விடுதலைக்கான போராட்டம்’ என்ற இந்த நடைபவனி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் கண்டி பொதுச்சந்தைப் பகுதியில் இருந்து ஆரம்பித்து மாவனல்ல திசையை நோக்கி நகர்ந்தது.
பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களும் இந்த நடைபவனியில் பங்கு பெறுகின்றனர்.
இந்த நடைபவனி மாவனல்ல, கலிகமுவ, தங்கோவிட்ட, யக்கல, பேலியகொடை வழியாக மே முதலாம் திகதி கொழும்பை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.