மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் 50 அதிகாரிகள் திடீர் ஆய்வு – எடை இயந்திரங்கள் பறிமுதல்
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் எடை சரிபார்ப்பு முத்திரை பெறாத 250 மின்னணு எடை இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் காய்கறி எடை குறைவாக இருப்பதாக நுகர்வோர் தரப்பிலிருந்து புகார் எழுந்ததை தொடர்ந்து இன்று அதிகாலையில் தொழிலாளர் நலத்துறை இணை இயக்குனர் சுப்ரமணியன் தலைமையிலான 50 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது.
ஒவ்வொரு கடையிலும் சென்று எடை இயந்திரங்கள், படிக்கற்களை ஆய்வு செய்த அதிகாரிகள் எடை சரிபார்ப்பு முத்திரை பெறாத 250 மின்னணு எடை இயந்திரங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட எடைக்கற்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்துள்ள அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் இதுபோன்ற ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.