ஜனாதிபதிக்கான பண ஒதுக்கீட்டை நிறுத்தி , ஜனாதிபதியை அகற்ற முடியும் : குமார வெல்கம
நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் ஜனாதிபதியின் அனைத்து செலவினத் தலையீடுகளும் துண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம முன்மொழிந்துள்ளார்.
ஜனாதிபதி ராஜினாமா செய்ய வைத்து விட்டு புதிய பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்திற்கு தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிகிறார்.
சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்லது இடைக்கால அரசாங்கத்திற்கான எந்தவொரு பிரேரணையிலும் தாம் கையொப்பமிடப் போவதில்லை என அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.