நல்லூர் இரதோற்சவத்தில் ஒன்று கூடுவதை தவிர்கவும் – மகேசன்

நாட்டில் நிலவும் கோவிட் -19 நெருக்கடியினை கருத்தில் கொண்டு நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில்ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரியுள்ளார்.

நாளை மறுதினம் நல்லூர் ஆலய தேர் உற்சவம் மிகவும் விமரிசையாக இடம்பெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோணா நிலைமையினை கருத்திற் கொண்டு மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இரதோற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமையும், தீர்த்தோற்சவம் மறுநாள் 18ம் திகதி இடம்பெறவுள்ளது.

 இந் நிலையில் நல்லூர் கந்தனை தரிசிப்பதற்குதற்பொழுது பக்தர்கள் அதிகளவில்  வருகை தருவதனை நாங்கள் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.  சுகாதாரப் பகுதியினர் அதேபோன்று போலீசார் மற்றும் பாதுகாப்பு பிரிவினரும் ஆலய நிர்வாகத்தினரும் சுகாதார அறிவுறுத்தல்களை பக்தர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

 இயலுமானவரை வீடுகளிலிருந்து ஆலயத் தேர் உற்சவத்தின் கண்டுகளிக்க முடியும் எனவே பக்தர்கள் இந்த விடயத்தினை கருத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

Comments are closed.