’19’ இற்கு சமாதி கட்டிய பின்னரே புதிய அரசமைப்புப் பணி ஆரம்பம் – நீதி அமைச்சர் அலி சப்ரி
அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் வரைவு நகல் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே முன்வைக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதியின் பதவிக் காலம் என்பது ஐந்தாண்டுகளாகவே இருக்கும். அதில் மாற்றம் வராது. அதேபோல் நபரொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என்ற விடயத்திலும் திருத்தம் எதுவும் செய்யப்படாது.
அதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்ட பின்னரே, புதிய அரசமைப்பை உருவாக்கும் பணி ஆரம்பமாகும்” – என்றார்.
Comments are closed.