அரசுக்கு காலக்கெடு : ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறுகிறார்கள்
அரசாங்கத்துக்கு முடிவெடுக்க கால அவகாசம் வழங்கிவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்காலீகமாக பாராளுமன்ற நுழைவுகளை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் அரசாங்கம் அதற்கு முன் பதவி விலக வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
“அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக உடனடியாக ராஜினாமா செய்யுங்கள். அல்லது அடுத்த கட்டத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். இந்த வாயிலை மட்டுமல்ல நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள அனைத்து வாயில்களையும் மூடிவிட்டு நாடாளுமன்றத்தை மூடுவோம். இன்னும் சில வாரங்களில் மற்றொரு சுற்றுக்கு தயாராகி விடுவோம். எனவே இன்று அரசாங்கத்திற்கு சிவப்பு அறிவிப்பு எச்சரிக்கையை விடுக்கிறோம். அரசு நாட்களை எண்ணிக்கொண்டே இருக்க சொல்லிவிட்டு இன்று புறப்படுகிறோம். தடைகளை போடு. பதுங்கு குழிகளை அமைத்துக்கொள். விரைவில் மீண்டும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட வருவோம். ஒரு புறமாக மட்டும் முற்றுகை இட வரமாட்டோம். கோத்தபாயவின் காலம் முடிந்துவிட்டது. நாங்கள் கொடுக்கும் காலக் கெடுவுக்குள் கண்ணியத்துடன் பதவியை விட்டு இறங்கி சென்றுவிடுங்கள். ”