20வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் அறிவிப்பு இன்று இரவு 12 மணிக்கு வர்த்தமானி!
சில வாரங்களுக்கு முன்னர் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று இரவு 12 மணிக்கு வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.
இதன் ஊடாக 19ஆவது திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் காலங்களில் இந்த வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.