சுயாதீனக் குழு இன்று முத்தரப்பு சந்திப்பு.
சுயாதீனமாகச் செயற்படுவதாக அறிவித்த 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கின்றனர்.
நாட்டில் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் நெருக்கடிகள் வலுத்துள்ள நிலையில் இவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் இந்தச் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன என்று சுயாதீனக் கட்சிகளின் குழு தெரிவித்துள்ளது.
இதன்போது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் இடைக்கால அரசை நிறுவுதல் தொடர்பில் முக்கிய பேச்சுக்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.