புதிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து, அமெரிக்கா சுற்றுப்பயணம் – தகவல்
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இங்கிலாந்து, அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக துபாய் நாட்டில் நடைபெற்ற தொழில் கண்காட்சியில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். முதலமைச்சரின் துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் லண்டனுக்கும், ஜூலை முதல் வாரத்தில் அமெரிக்காவுக்கும் அவர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் வருகிற ஜூன் மாத இறுதியில் லண்டனுக்கும், ஜூலை மாதம் அமெரிக்காவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் மூலம் மேலும் பல நிறுவனங்களுடன் பேசி, தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதலமைச்சரின் துபாய் சுற்றுப்பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அவர் வெளிநாடு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.