எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்குவதுடன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு நான்கு விசேட குழுக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
வஜிர அபேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்தாலோசித்து முன்மொழிவுகளைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்டனர்.
மருந்து தட்டுப்பாடு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் பணி ருவான் விஜேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாடு குறித்து அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கவுள்ளார்.
சாகல ரத்நாயக்க பெற்றோலிய நெருக்கடி குறித்து அறிக்கையிடவுள்ளார்.
இந்தக் குழு அனைத்து பங்குதாரர்களையும் சந்தித்து உண்மையான பிரச்சினைகளைக் கண்டறிந்து அவர்களின் முன்மொழிவுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.