எம்.பி. ஒருவரின் பாதுகாப்புக்கு 6 பொலிஸார்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 6 பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட ஆறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பிரதேச பொலிஸ் நிலையங்களில் தற்போது கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் தமக்கு விருப்பமானவர்களை அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக்கொண்டு தமது பாதுகாப்புச் சேவைகளுக்கு அவர்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடிய வாய்ப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், அவர்களின் வீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மரணமடைந்துள்ளார்.
அதனைக் கவனத்தில்கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்குப் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.