ரணிலின் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதுடன், கட்சித் தலைமையின் கருத்துக்களைப் புறக்கணித்து சிலர் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இதனை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
எனவே, பிரிவினையை தடுக்கும் வகையில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அமைச்சர் பதவிகளை தனித்தனியாக இல்லாமல் குழுவாக பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.