லக்னோவை வீழ்த்தி 24 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றில் இடத்தை பிரகாசப்படுத்தியது..!
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2022 பதிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிப் போட்டியை நெருங்கி வருகிறது.
இதனிடையே, தொடரின் 63வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது. இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கின் PlayOFF சுற்றிலும் வாயப்பை பிரகாசப்படுத்தினர்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். படிக்கல் 39 ரன்களும், சஞ்சு சாம்சன் 32 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழக்க, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோரான தீபக் ஹூடா 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். ஸ்டோனிஸ் 27 பெற்றார்.
டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த போட்டி மூலமாக இதுவரையான ஐபிஎல் போட்டிகளின் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த ராகுல் தலைமையிலான லக்னோ அணி 3வது இடத்துக்கு பின்தள்ளப்பட, சஞ்சு சம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துக் கொண்டது.