புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ச தேர்வு.
இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் ராஜபக்க்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் ,நாடளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்க்ஷவிற்கு 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் கிடைத்தன.
அதன்படி , செல்லுபடியற்ற வாக்குகள் 25 பதிவாகியதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
வாக்கெடுப்பு இடம்பெற்றால் சுதந்திரக் கட்சியினர் வாக்கு சீட்டில் குறுக்கு கோடிட்டு பதிவு செய்வார்கள் என மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.