இலங்கைக்கு உதவி பெற்றுக் கொடுக்க ஜப்பான் தூதர் ஜப்பானுக்கு சென்றாரா?
இலங்கைக்கு உதவி பெற்றுக் கொடுக்க ஜப்பான் தூதர் ஜப்பானுக்கு சென்றதாக வெளியான வதந்தி பொய்! தூதர் அறுவை சிகிச்சைக்கு சென்றுள்ளார் எனவும் ஜப்பானிய தூதரகம் வதந்திகளால் மகிழ்ச்சியடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
5 பில்லியன் டொலர் உதவி வழங்குவதற்காக ஜப்பான் தூதர் திடீரென ஜப்பான் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிய தூதுவர் சத்திரசிகிச்சைக்காக ஜப்பான் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த உதவி குறித்த செய்தி தொடர்பில் பல தரப்பினரும் ஜப்பானிய தூதரகத்திடம் வினவியதோடு, தற்போது அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை எதிர்காலத்தில் வெளியிட ஜப்பானிய தூதரகம் தயாராகி வருவதாக தெரியவருகிறது.