குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலகட்டமாகும். தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கி உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து துவங்கி சீசன் துவங்கி உள்ளது.
இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் சிற்றருவி புலியருவி உள்ளிட்டவர்கள் குளித்து மகிழ்ந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் குற்றாலம் மலைப் பகுதியிலும் பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது மேலும் காலை முதல் பிரதான அருவி குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பாதுகாப்பு வளைவை தாண்டி அருவிகளில் தண்ணீர் விழுந்ததால் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.
ஓரிரு வாரத்தில் குற்றால சீசன் களைகட்ட தொடங்க உள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்தும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையும் சீசன் முன் அனுபவத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் செல்பி எடுத்தும் சாரல் மழையில் நனைந்தும் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.