சிறைச்சாலைகளில் STF
சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தும் நடவடிக்கை, எதிர்வரும் வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக, அவர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை மதில்களின் மேலால் சட்டவிரோதமாக பொருட்கள் சிறைச்சாலைகளினுள் வீசப்பட்ட சம்பவங்கள், அண்மைக் காலத்தில் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பான சம்பவங்களில் பலர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் சிறைச்சாலைகளுக்கு வெளியே பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாக கொண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்படுவதோடு, சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது உட்பட, சிறைச்சாலைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.