’21’ திருத்த வரைபு தொடர்பில் பிரதமர் தலைமையில் நாளை விசேட கூட்டம்.
உத்தேச 21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
உத்தேச 21 ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கருத்துகளை உள்வாங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமையவே நாளை கூட்டம் நடைபெறுகின்றது.
அதன்பின்னர் 21 ஆவது திருத்தச் சட்டமூலம் திருத்தப்பட்டு, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் மீண்டும் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்படும்.