உக்ரைனிலிருந்து கப்பல் வழியாக உணவு ஏற்றுமதியை அனுமதிக்க தயார் – ரஷியா.
உக்ரைனிலிருந்து கப்பல் வழியாக உணவு ஏற்றுமதியை அனுமதிக்க தயார் – ரஷியா உக்ரைனில் மனிதாபிமான உணவு வழித்தடங்களை வழங்க ரஷியா தயாராக உள்ளது என அந்நாட்டு துணை வெளியுறவு மந்திரி ஆண்ட்ரே ருடென்கோ தெரிவித்தார்.
உக்ரைனின் கருங்கடலில் உள்ள துறைமுகங்கள் போருக்குப் பிறகு ரஷியாவால் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, உக்ரைனில் 20 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தானியங்கள் கிடங்குகளில் சிக்கியுள்ளன.
உக்ரைனில் இருந்து உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு மனிதாபிமான உணவு வழித்தடங்களை உருவாக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ தெரிவித்தார்.