வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயவுள்ள முன்னாள் தளபதிகள்!
நாட்டில் இவ்வருடம் மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து மே 9 ஆம் திகதி வரை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் இராணுவத் தளபதிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.
கடற்படையின் Admiral of the Fleet வசந்த கரன்னாகொட இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கவுள்ளார்.
ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் விமானப்படையின் Marshal of the Air Force ரொஷான் குணதிலக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்துக்கு அருகில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் பின்னர் காலிமுகத்திடல், கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஆராய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையோரிடம் நாளை முதல் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.