விமலின் மனைவி சஷிக்கு 2 வருட சிறைத்தண்டனை!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பியின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களைக் கொண்டு, கடவுச்சீட்டைத் தயாரித்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
வழக்கை விசாரணை செய்த கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தின் தலைமை நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல, சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்தார்.