பஸ்ஸின் சில்லுக்குள் சிக்குண்ட நபர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ்ஸின் சில்லுக்குள் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் நுவரெலியா கிளைக்குச் சொந்தமான பஸ் ஒன்று உடபுஸல்லாவுக்குச் செல்வதற்காக பஸ் தரிப்பு நிலையத்துக்குள் வந்த வேளையில், நபர் ஒருவர் வீதியைக் கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபர் எதிர்பாராத விதமாக, பஸ்ஸில் மோதுண்டு பஸ்ஸின் சில்லுக்குள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸின் சாரதியை நுவரெலியாப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்துடன் பஸ்ஸையும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியாப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Comments are closed.