பொலிஸ் துணைப் பரிசோதகர் வாகன விபத்தில் பரிதாபப் பலி.
இரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் துணைப் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவராவார்.
பொலிஸ் துணைப் பரிசோதகர் பயணித்த ஓட்டோ கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்த் திசையில் வந்த லொறி மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் ஓட்டோவை ஓட்டிச் சென்ற பொலிஸ் துணைப் பரிசோதகர், படுகாயமடைந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.