முதல் ஐந்து மாதங்களில் 288,645 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்ல இவ்வருடத்தின் (2022) முதல் ஐந்து மாதங்களில் 288,645 பேர் தமது கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடியுள்ளதாகவும், இதனால் அதிகமானோர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வருடம் ஜனவரியில் 52,278, பெப்ரவரியில் 55,381, மார்ச் மாதம் 74,890, ஏப்ரலில் 53,151, மே மாதம் 52,945 ஆகிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
நாளாந்தம் முன்பதிவு செய்யாதவர்களால் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தைச் சுற்றி பல கிலோமீற்றர் தூரம் வரிசைகள் காணப்படுவதாகவும், நாளாந்தம் 1500க்கும் அதிகமானோர் சேவையாற்றி வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டில் 382,506 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.