பேச்சாளர் பதவியை கோருகின்றது ரெலோ.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியினை இம்முறை ரெலோவிற்கு வழங்க வேண்டும் என கோருவதாக ரெலோவின் தலமைக் குழுவில் தீர்மானித்துள்ளனர்.

ரெலோவின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன் தினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ரெலோ இம்முறை 3 ஆசணங்களை வெற்றியீட்டிய நிலையுல் புளட் கட்சியும் ஒரு ஆசணத்தை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் முதல் தடவை எதிர்வரும் 20ம் திகதி கூடும் சமயம் நாடாளுமன்றக் குழுப் பேச்சாளர் தெரிவும் இடம்பெறுவது வழமையானதாகும்.

இவற்றின் அடிப்படையில் கூட்டமைப்பு பெற்ற ஆசணத்தில் கணிசமானவை ரெலோ மற்றும் புளட்டும் பெற்றுள்ளமையினால் பேச்சாளர் பதவி ரெலோவிற்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அதனை இம் முறை புளட்டிற்கு வழங்க வேண்டும் என தீர்மானகிக்கப்பட்டது.

2010இல் ஈ.பி.ஆர்.எல்.எவ் இடமும் , 2015இல் தமிழ் அரசுக் கட்சி வசமிருந்த பேச்சாளரை தற்போது ரெலோ கோருகின்றது.
இவ்வாறு மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்வரும் 20ஆம் திகதிய நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன் வைத்து வலியுறுத்துவதாகவும் தீர்மானித்துள்ளனர்.

Comments are closed.