புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறும்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற உள்ளது.

சுகாதார தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து இக்கூட்டம் நடைபெற உள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர்களுள் 25 அமைச்சர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இவ்வமைச்சரவை கூட்டத்தில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதா அல்லது இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படுவதா என்பது குறித்து பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Comments are closed.