அங்கொட லொக்காவின் காதலி மற்றும் அவருக்கு உதவிய இந்திய சட்டத்தரணி உள்ளிட்டோரிடம் இந்திய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை

அங்கொட லொக்கா என சந்தேகிக்கப்படும் நபரின் பூதவுடல் தொடர்பாக கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி மற்றும் வைத்தியசாலையில் மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

மாரடைப்பு காரணமாகவே அங்கொட லொக்கா மரணமடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஷம் உடலில் கலந்தமையினால் அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அங்கொட லொக்காவின் உறவினராக முன் நின்ற சட்டதரணி சிவகாமி சுந்தரி பூதவுடலை மதுரை நகருக்கு எடுத்துச் சென்றுள்ளார். அதற்காக அவரது காதலியான அமானி தஞ்ஜி மற்றும் அவர்கள் வசித்து வந்த வீடமைப்பு திட்டத்தின் நண்பர் ஒருவரும் உதவியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அங்கொட லொக்காவிடம் இருந்த கைத்துப்பாக்கி நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கையளிக்க சிவகாமி சுந்தரியும் தஞ்ஜியும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைத்துப்பாக்கியை பெற்று கொண்ட நபர் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லையென்றும் இதனை கண்டறிய இந்திய பாதுகாப்பு தரப்பினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்கொட லொக்காவிற்கு பிரதீப் சிங் எனும் பெயரில் அந்நாட்டில் அடையாள அட்டையொன்றை பெற்று கொள்ள சட்டதரணி உதவியுள்ளமையும் விசாரணைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.