தங்கள் மதத்தைப் பற்றி பேசினால் நாக்கை அறுப்போம் என்கிறார்கள், இது வன்முறையில்லையா- வி.ஹெச்.பி. கேள்வி

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக் கருத்தைக் கூறியதான குற்றச்சாட்டில் நுபுர் ஷர்மா பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச அமைப்பின் தலைவர் அலோக் குமார் ஏ.என்.ஐ. செய்தி ஏஜென்சியிடம் கூறும்போது, “நுபுர் ஷர்மா கலந்து கொண்ட ஒரு விவாதத்தில் இந்து தெய்வங்கள் பற்றி அவமரியாதையாக சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன, கல்லைக் கும்பிடுபவர்கள், மசூதியில் கண்டெடுத்தது சிவலிங்கம் இல்லை அது நீரூற்று என்று பேசப்பட்டது, இந்த விவாதச் சூட்டில் நுபுர் ஷர்மா ஏதோ ஒன்றைக் கூறினார். அது சட்டப்பூர்வமானதோ, சட்ட விரோதமானதோ, அது குற்றமோ இல்லையோ அது கோர்ட்டில் தீர்மானிக்கப்பட வேண்டியது.

கோர்ட் தீர்ப்பு வருவதற்கு முன்பே நாடு முழுதும் வன்முறையான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்படுகின்றன, இது சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுமா? நபிகள் பற்றி ஏதாவது பேசினால் நாக்கை அறுப்போம் என்று ஓபனாக பேசுகிறார்கள். இந்த மாதிரி பேசுபவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இந்தப் போக்கு உண்மையில் கவலைக்குரியது.

அவர் என்ன பேசினார் என்பது இருக்கிறது, அதைக் கேட்கட்டும் அதற்கேற்ப போலீஸார் நடவடிக்கை எடுக்கட்டும். கோர்ட் கேட்கட்டும் பிறகு கோர்ட் தீர்ப்பளிக்கட்டும்.

நுபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும் என்கிறார் ஓவைசி, கைது என்பது யாரோ ஒருவர் கேட்கிறார் என்பதற்காக செய்ய முடியாது. சட்டப்படியே கைது செய்ய முடியும். நுபுர் ஷர்மா பேசியது கேமராவில் உள்ளது. போலீஸார் விசாரணை செய்ய வேண்டிய அவசியமேயில்லை, அதிலேயே எல்லாம் உள்ளது. அவர் என்ன கூறினார் என்பதை கேட்கட்டும் அதன்படி புகார் அளிக்கவும். எனவே இப்போது எதற்கு இந்த கைதுப் பேச்சு” என்று அலோக் குமார் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.