எம்.ஜி.எம். நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு
எம்.ஜி.எம். குழுமத்திற்குச் சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை, திருநெல்வேலி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.எம். தலைமை அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக வந்துள்ளனர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.ஜி.எம். நிறுவனம் தீம்பார்க், மதுபான உற்பத்தி, ஹோட்டல் உள்ளிட்டவற்றை நடத்தி வரும் பிரபல நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.