நுவரெலியாவில் மாணவன் மாயம் – பெற்றோர் முறைப்பாடு.
நுவரெலியா மாவட்டத்தில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் தோட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆசான் என்ற 12 வயது பாடசாலை மாணவனைக் காணவில்லை என்று நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ஊடகங்களுக்கு நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை காலையில் இருந்து மாணவன் காணாமல்போயுள்ளார் என்று அவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.