13,19 ஆம் திருத்தங்களில் கைவைக்க கூடாது எச்சரிக்கிறார் மனோ
தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி 13ஆம், 19ஆம் அரசியல் யாப்புத் திருத்தங்களை மேற்கொள்ளுமாக இருந்தால் அதன் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
13ஆம், 19ஆம் அரசியல் யாப்புத் திருத்தங்களில் அரசாங்கம் கைவைக்கக் கூடாது. அந்தத் திருத்தங்கள் மீது கை வைப்பதாக இருந்தால் அவற்றை இப்போது உள்ளதை விட இன்னமும் சிறப்புற மாற்றுவற்காக இருக்க வேண்டுமேயொளிய அதனை அழிப்பதாக இருக்கக் கூடாது.
வெறுமனே நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு தாம் நினைக்கின்ற அனைத்தையும் செய்துவிட முடியும் என தற்போதைய அரசாங்கம் நினைக்கின்றது.
அது போலவே 1956ஆம் ஆண்டு இருந்த அரசாங்கம் தன்னிடம் இருந்த பெரும்பான்மையை பயன்படுத்தி தனிச் சிங்களச் சட்டத்தினை கொண்டுவந்தனர். அதன் பிற்பாடு நாடு பாரிய யுத்தத்தினை சந்தித்தது. நாட்டினுடைய பொருளாதாரம் அகல பாதாளத்தினுள் சென்று இன்னமும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய முடியாமல் நாடு தவிக்கின்றது.
நாடாளுமன்றத்தில் தலைகளின் எண்ணிக்கையில் பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு எதனையும் செய்யலாம் என நினைத்தால் அது முட்டாள் தனம். ராஜபக்ஷாக்கள் கடந்த கால வரலாற்றுப் படிப்பினையை மனதில் கொண்டு செயற்படுவார்கள் என நம்புகிறேன், என்றார்.
Comments are closed.