ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டோருக்கு பிணை
ஜனாதிபதி செயலகத்தின் இரண்டு நுழைவாயில்களையும் நிதியமைச்சு மற்றும் பொது திறைசேரி பயன்படுத்திய இரண்டு வாயில்களையும் மறித்து போராட்டம் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் தலா 500,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பௌத்த பிக்கு, நான்கு பெண்கள் மற்றும் 16 ஆண்கள் அடங்குவர்.
கொழும்பு லோட்டஸ் வீதியில் இருந்து ஜனாதிபதி செயலகத்துக்கான இரண்டு நுழைவாயில்கள் மற்றும் நிதி அமைச்சின் நுழைவாயில் தடைகளை பொலிஸார் இன்று காலை அகற்றியுள்ளனர்.