தமிழினம் தரமிறங்கிப் போய்விட்டது- மனோகனேசன்

பெயர் பலைகையில் உள்ள எழுத்துப்பிழை சீர் செய்யப்படமையை தூக்கிப் பிடித்துக் கொண்டு சமூக ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கின்றனர். அந்தளவிற்கு தமிழ் இனம் தரமிறங்கிப் போய்விட்டது என முன்னாள் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் மனோகனேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினுடைய பெயர் பலகையில் உள்ள தமிழ் மொழியில் இருந்த எழுத்துப்பிழை திருத்தப்பட்டதை பலர் பெரிதாக பேசுகின்றனர். இது ஒரு சிறிய விடயம். இதனை பெரிதுபடுத்த தேவையில்லை.

அரச பெயர்ப் பலகைகளில் மும்மொழிகளுக்கும் முக்கியத்துவமளித்து அவற்றில் எழுத்துப்பிழைகள் ஏதேனும் இருந்தால் அதனை திருத்த வேண்டியது அரசாங்கத்தின் கடைப்பாடாகும். அதனை பெரிதுபடுத்தத் தேவையில்லை, என்றார்.

Comments are closed.