ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும்! அனைத்துக் கட்சி ஆட்சிக்கு அனுமதி! மொட்டு கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று பண்டாரகம பிரதேச சபையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய விசேட பிரேரணையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேசசபை உறுப்பினர் ருவன் பி பெரேரா அவைத் தலைவர் தேவேந்திர பெரேராவிடம் கையளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மகேஷ் கொத்தலாவல மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி உறுப்பினர்.
பண்டாரகம பிரதேச சபையில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் உட்பட 18 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 ஆசனங்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 3 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 2 ஆசனங்களும் உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏழு உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான காமினி சரச்சந்திர, அகில பீரிஸ், தயானந்தனி பெரேரா மற்றும் உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.
பிரேரணைக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தர்ஷன பீரிஸ் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.